உலகம் அழிந்தது..........
(பகுதி - 3)
மற்றவர்கள் யாருமே இல்லாத நிலையில் தனியனான முடிவெடுப்பதெற்குத் தலைப்பட்ட நான் ஓடித்தப்பவோ, ஒழிந்துகொள்ளவோ முடியாதென்பதை உணர்ந்துகொண்டேன். பூமிப்பரப்பு பாரிய சத்தத்துடன் சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறுகின்றது. இறுதியாய் ஒரேயொரு துண்டுப் பூமி என் காலடிகளில் மட்டும் எஞ்சுகிறது.
என்னை நினைக்க எனக்கே பரிதபமாய் இருந்த என் வாழ்க்கையின் கடைசி, என் வாழ்க்கையின் என்பதை விட இந்த உலகின் இறுதி வினாடிகள் இதோ என் கண்முன்னால் என் கால்களுக்குக் கீழே எஞ்சியிருந்த பூமியின் இறுதி எச்சத்துண்டும் என் கால்களுக்குக் கீழே எங்கேயோ நழுவுகிறது. அண்டசராசரத்தில் பற்றிக்கொள்ள எதுவுமே இல்லாமல் இறுதியாய் 'ஐயோ...' பெருங்குரல் எழுப்பிக்கொண்டு திடுக்கிட்டுக் கண்விழித்தேன் நான் என் முன்னிருந்த digitel கடிகாரம் நேரத்துடன் திகதியையும் சேர்த்துக்காட்டியது, நேரம் அதிகாலை நான்கு மணி, திகதி 22.12.12 புதிய நாள் புலர்ந்து கொண்டிருந்தது.
-முற்றும்-