நான்...
என்னைப் பற்றிச் சொல்வதற்கொன்றுமில்லை நான் ஒரு வாசகன் என்பதைத் தவிர, அதுவே என் பெரிய ஒரு அடையாளம். வாசித்தல் அப்படியொரு காதல் எனக்கு அதிலும் தமிழ் எழுத்துக்கள் மேல் சொல்லவொணா மோகம், எனக்குத் தனிமை என்ற உணர்வு என்றும் தோன்றாமலிருக்க மிக முக்கிய காரணம் புத்தகங்கள் என்ற என் உற்ற நண்பர்களே. என் பொழுதுகள் எப்போதும் வாசிப்பினூடே கழியும்.
வாசிப்பு அதுவே என் உயிர் மூச்சு. எத்தனையோ வகையான புத்தகங்களைப் படித்ததனால் பலவகையான கருத்துக்களை உள்வாங்கினேன். ஆனாலும் இதுவரை நானொரு குறை குடமே, என்றும் நிரம்பாது இது, என்றும் தணியாது என் வாசிப்பின் மீதான காதல். இவ்வாறு பல்வகைக் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு மட்டுமே இருந்த நான் ஒரு தருணத்தில் என் சொந்தக் கருத்துக்கள் சிலவற்றை வெளியிடவும் ஆவல் கொண்டேன். ஆனாலும் நான் ஒரு நல்ல வாசகனே மட்டுமன்றி ஒரு சிறந்த எழுத்தாளனோ, கவிஞனோ அல்ல எனினும் என் உணர்ச்சிகளை எழுத்தில் கொண்டுவந்தே தீரவெண்டும் என்ற முனைப்பே இந்த தளத்தின் உருவாக்கத்திற்கு ஆணிவேர். என் கருத்துக்களையும் என் உணர்ச்சிகளையும் என்னால் முடிந்தளவில் எழுத்துக்களில் வடிக்க முயன்றுள்ளேன். வழுக்களைப் பொறுத்து கருத்துக்களைப் பரிசீலிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
என்னால் கூறப்படுகின்ற கருத்துக்கள் யாவும் என்னால் சரியென உணரப்பட்டவையே தவிர இது மட்டுமே உண்மை, சரி என்பது பொருளல்ல,என்னால் கூறப்பட்டவை சம்பந்தமாக உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

என் பதிவுகளில் சில நான் வாசித்தவற்றில் என்னைப் பாதித்த சிலவும் இடம்பெறலாம்.
"என் பதிவுகள் மூலம் என்னைப் புரிந்துகொள்ளுங்கள், என்னைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், தவறாகப் புரிந்துகொண்டுவிடாதீர்கள்."
*** "இப்பதிவுகள் யாரையும் புண்படுத்தும் நோக்கமற்றவை."