ஆலமரமும், பறவைகளும்....
உருவகக் கதை.
பன்னெடுங்காலமாக ஓர் ஆலமரம் மிகப் பசுமையாய் வளர்ந்து, பரந்து மிகச்
செழிப்போடும், பொலிப்போடும் நிலைத்திருந்தது. அம்மரம் பல வகைப்
பறவைகளுக்குப் புகலிடமாய்க் காணப்பட்டது. அம்மரத்திலே பல வகைப் பறவைகள்
வாழ்ந்த போதிலும் அவற்றில் மிகப் பிரதானமானவை பருந்துகளும், கிளிகளும், சிட்டுக்குருவிகளுமாகும். இவையனைத்தும் ஒரே குடும்பமாய் ஒற்றுமையாய் அம்மரத்தில் வாழ்ந்து வந்தன.
இவ்வாறு இனிதே சென்று கொண்டிருந்த அப்பறவைகளின் வாழ்க்கையில் பெரியதோர்
ஆபத்தை எதிர்நோக்க வேண்டி வந்தது, அதாவது அப்பறவைகள் வாழ்ந்த ஆலமரத்தின்
செழிப்பையும் பொழிப்பையும் பார்த்த வேறு மரங்களில் வாழ்ந்த வேறு பறவைகள்
இவ்வால மரத்தின் வளங்களைச் சுவைக்க ஆசை கொண்டன. அதனால் காலத்துக்குக் காலம்
ஆந்தைகள், வெளவால்கள், பிணந்தின்னிக் கழுகள் என்பவற்றின் வருகையும் அதன்
மூலம் பெரும் பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இறுதியாக வந்த
பிணந்தின்னிக் கழுகுகள் பலத்தில் பெரியவையாக இருந்த படியினால் பலகாலம்
அந்த ஆலமரத்திலேயே தங்கிவிட்டிருந்தன.
அந்தக் கழுகள் ஆலமரத்தில் வாழ்ந்த காலம், அந்த மரத்திலேயே நிரந்தரமாய் வாழ்ந்துவந்த பறவைகளுக்கு மிகுந்த போராட்டக் காலமாய் அமைந்திருந்தது, பலத்தால் பெரியவையான அந்தக் கழுகுகள் மற்றைய பறவைகளை அடக்கியாள ஆரம்பித்தன. கொஞ்சக்காலம் எதிர்த்த மற்றைய பறவைகள் பின்னர் அந்த ஆளுகைக்குப் பழகிப்போயின. பின்னர் குழுக்களாகச் சேர்ந்து எதிர்க்கத் துவங்கின. இவற்றின் ஒட்டுமொத்த எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பிணந்தின்னிக் கழுகுகள் அம்மரத்தை விட்டுப் பறந்துவிட்டன. கழுகுகள் செல்லும் போது மரத்திலேயே நிலையாய் இருந்த மூவினப் பறவைகளுக்கிடையிலும் பிரிவினையைத் தோற்றுவித்தே சென்றன.
கழுகுகள் மரத்தை விட்டுச் சென்றதும் பலத்திலும், எண்ணிக்கையிலும் உயர்வாகக் காணப்பட்ட பருந்துகள் மரத்தை ஆள முடிவெடுத்துக் கொண்டன, ஆனாலும் அனைத்துப் பறவைகளின் விருப்பங்களுக்கிசைவான ஆட்சியே நடத்தப்படுவதாய்க் கூறிக்கொண்டன. இவ்வாறு இந்த ஆட்சி பறவைகளுக்கு இன்ப, துன்பங்களை மாறி மாறிக் கொடுத்தபடி நடந்துகொண்டிருந்த வேளை பருந்துகளுக்கும் கிளிகளுக்கும் சிறிய சிறிய முரண்பாடுகள் தோன்றி பெரியதோர் எதிர்ப்புணர்வாய்த் தோன்றவாரம்பித்தது. இறுதியாய்க் கிளிகளில் ஒரு குழு மரத்தின் ஒரு பகுதியைத் தாங்களே ஆண்டுகொள்ளவும் அப்பகுதியில் கிளிகள் மட்டுமே வசிக்க வேண்டுமென்ற முடிவையும் எடுத்துக்கொண்டது. இதை ஏற்றுக்கொள்ளாத ஆளும் பருந்துகளுக்கும், கிளிகளுக்கும் இடையில் பெரும் போராட்டம் வெடித்தது.
போராட்டமென்றால் சாதாரண போராட்டமல்ல பருந்துகளும், கிளிகளும் மாறி மாறி உயிர்களை எடுப்பதிலேயே குறியாய் இருந்தன இரு தரப்பிலும் பல்லாயிரம் உயிர்கள் மடிந்தன. யார் பக்கம் நியாயம் என்பதெல்லாம் பார்க்கப்படவில்லை தத்தமது அதிகாரங்களையும் பலத்தையும் நிலை நிறுத்திக்காட்ட பாரிய போராட்டம் நிகழ்ந்தது. இதில் பரிதாபம் யாதெனில் இவை எதிலுமே சம்பத்தப்படாத சிட்டுக்குருவிகள் மத்தளத்தைப் போல் இரு பக்கமும் அடிவாங்கியதுதான். இந்தப் போராட்டத்தை வெறுத்த பல கிளிகளும் பருந்துகளும் இருந்த போதிலும் அவற்றாலும் எதுவுமே செய்ய முடியவில்லை. இறுதியாய் ஒரு சுபதினத்தில் கிளிகள் செறிவாய் வாழ்ந்த பிரதேசத்தில் குடியிருந்த சிட்டுக்குருவிகள் பலவந்தமாய் குடிபெயரச் செய்யப்பட்டன.
மிக நீண்ட காலப் போராட்டத்தின் பின்னர் பலத்தாலும், ஆட்சி அதிகாரத்தாலும் பலமாயிருந்த பருந்துகளால் கிளிகள் தோற்கடிக்கப்பட்டு போராட்டம் அடக்கப்பட்டது. இருந்தாலும் இப்போராட்ட காலத்தில் மரத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டு மரம் பலமிழந்தும், வலுவிழந்தும் போனது. போராட்டம் அடக்கப்பட்டபின் கிளிகள் வாய்மூடி மௌனிகளாக்கப்பட்டன, எது நடந்தாலும் எதிர்த்துக் கருத்திட முடியா நிலையிலே கிளிகள் வாழப்பழகிக் கொண்டன.
இப்படியே சிறிது காலம் சுமுகமாய்ச் சென்றுகொண்டிருந்தது, இக்காலப்பகுதில் மரம் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது, இப்படியே நல்லபடியாகப் பொழுதுகள் சென்றுகொண்டிருந்த வேளையில் சாதுவான சிட்டுக்குருவிகளின் செழிப்பான அமைதியான வாழ்வு பருந்துகளின் கண்களை உறுத்த ஆரம்பித்துவிட்டது. சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட சிட்டுக்குருவிகளுக்கெதிரான வன்முறைகள் மிகப் பெரிதாகி விஸ்வரூபம் எடுக்கவாரம்பித்துள்ளன. இது இப்படியே தொடர்ந்தால் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கலாம் என்ற அச்சம் பறவைகளுக்கிடையே தோன்றியுள்ளது.
"மீண்டும் ஒரு போராட்டம் வந்தால் மரத்தின் நிலை என்னவாகும், பறவைகள் வாழவே முடியா வகையில் அழிந்துபோகுமோ என்பதே என்கவலை, ஏனனில் அம்மரத்திலே வாழும் பறவைகளில் நானும் ஒருவன் என்பதாலே."