மருதமுனைப் பாடசாலைகளை ஆண், பெண் பாடசாலைகளாகப் பிரித்தல்.
தலைப்புச் சம்பந்தமான என் கருத்துப் பதிவு.
பகுதி - 01
பகுதி - 01
மருதமுனைப் பாடசாலைகளினதும் பாடசாலை சமூகத்தினதும் மத்தியில் தற்போது
எழுந்துள்ள மிகப் பெரிய பிரச்சனை ஆண், பெண் கலப்புப் பாடசாலைகளைத்
தனிப்பால் பாடசாலைகளாக பிரிப்பதாகும்.
பிரிப்பது சம்பந்தமாக பார்ப்பதற்கு முன், சேர்ந்திருப்பதால் என்ன
பிரச்சனைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது என்பதைப் பார்ப்போம். ஆண், பெண் இருபாலாரும் இணைந்து ஒரே பாடசாலையில் கற்பதால் பல ஒழுக்க
வீழ்ச்சிகள், கற்றலின் நாட்டமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக
கூறப்படுகிறது. பாடசாலைகள் இணைந்து காணப்படுவது மட்டுமா இந்தத் தவறுகளுக்கும், வீழ்ச்சிக்கும் காரணம்? இந்தப்பாடசலைகள் இத்தனை காலமாக இணைந்து காணப்படும் போதும் இத்தகைய பிரச்சினைகள் இருந்தனவா? குறிப்பிட்ட சில காலங்களாகவேதானே இந்தப்பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன, பாடசாலைகள் இணைந்திருந்த போதிலும் முன்னைய காலங்களில் வளமான மாணவர் சமூகங்கள் உருவாக்கப்படவில்லையா? எனவே தற்போதைய பிரச்சினைகளுக்கு என்ன காரணங்கள் என அறிய தற்போதைய சமூகத்தைச் சற்றுக் கூர்ந்து நோக்குவோம்.
தற்போதுள்ள சமூக சூழலில் இளைஞர் சமூகம் ஒழுக்க விழுமியங்களுடன் வாழ்வதென்பது மிகுந்த கடினமானதொரு விடயமாகக் காணப்படுவதை நாம் அனைவரும் அறிந்தவர்களாகவே உள்ளோம். அதற்கு நிறையக் காரணங்களைக் கூறலாம், உதாரணமாக சினிமா, ஊடகங்கள், இணையம், மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கூறினாலும் இவற்றின் மூலம் நன்மைகள் பலவும் காணப்படலாம், ஆனால் பெற்றோர்களின் சரியான பரிபாலனம் இன்மை, மத ஒழுக்கங்கள் சரியான முறையில் போதிக்கப்பட்டு சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதைப் பார்ப்பதற்கு நேரமோ, மனமோ அற்ற நிலையிலே பெற்றொர் சமூகம் இருக்கிறது என்பதும் காரணம் என்பதே கவலைக்குரிய விடயம்.
தற்போதுள்ள சமூக சூழலில் இளைஞர் சமூகம் ஒழுக்க விழுமியங்களுடன் வாழ்வதென்பது மிகுந்த கடினமானதொரு விடயமாகக் காணப்படுவதை நாம் அனைவரும் அறிந்தவர்களாகவே உள்ளோம். அதற்கு நிறையக் காரணங்களைக் கூறலாம், உதாரணமாக சினிமா, ஊடகங்கள், இணையம், மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கூறினாலும் இவற்றின் மூலம் நன்மைகள் பலவும் காணப்படலாம், ஆனால் பெற்றோர்களின் சரியான பரிபாலனம் இன்மை, மத ஒழுக்கங்கள் சரியான முறையில் போதிக்கப்பட்டு சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதைப் பார்ப்பதற்கு நேரமோ, மனமோ அற்ற நிலையிலே பெற்றொர் சமூகம் இருக்கிறது என்பதும் காரணம் என்பதே கவலைக்குரிய விடயம்.
எமது
சமூகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒழுக்க நெறிகளை
அனைவரும் கடைப்பிடித்தும் கடைப்பிடிக்க தூண்டியும் வந்தால் எத்தனையோ
தவறுகளையும், பாவங்களையும் மாணவப் பராயத்தில் இருந்தே தடுத்து விடலாம்.
இதற்கு பெற்றொர், பாடசாலை ஆசிரியர்கள் காத்திரமான முடிவுகளை எடுத்தல்
வேண்டும். அதற்கும் தற்போது மிகப்பெரிய தடை "மனித உரிமைகள் நிறுவனம்" என்ற
பெயரில் உள்ளது. மனித உரிமைகள் நிறுவனத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்
எனப்பார்ப்போமேயானால் இலங்கையில் நடைபெற்ற யுத்த இறுதிக் காலகட்டத்திலேயே
மனித உரிமைகள் ஆணைக்குழுவும், மனித உரிமைகள், மாணவர் உரிமைகள் போன்ற
கருத்துக்களும் பிரபல்யம் பெற்றது.
எமது பாடசாலை வாழ்க்கைக் காலத்தில் செய்யும் தவறுகளுக்கு மிகக் கடுமையாகத்
தண்டிக்கப்பட்டுள்ளோம், ஆனாலும் அதனை வீட்டிற்கு அறியத்தரவோ,
பெற்றோர்களிடம் கூறவோ நாங்களே பயப்பட்டுள்ளோம், காரணம் ஆசிரியர்கள்
காரணமில்லாமல் தண்டிக்கமாட்டார்கள், நீ எதோ தவறு செய்திருக்கிறாய் எனக்கூறி
பெற்றோர்களும் தண்டிப்பார்கள் என்ற பயம். தவறுகளுக்கேற்ப கடுமையான
தண்டனைகளும் கிடைக்கப்பெற்றுத்தான் உள்ளன. ஆனால் தற்போது ஒரு ஆசிரியர்
தண்டித்தால் அல்ல, கண்டித்தாலே போதும் கண்டிக்கப்பட்ட மாணவர்களின்
பெற்றோர்களால் அந்த ஆசிரியருக்கெதிரான போலிஸ் புகார்ப் பதிவும், மனித உரிமை
ஆணைக்குழுவில் மாணவர் உரிமை மீறப்பட்டதாக வழக்கும் பதியப்படுகிறது.
இவ்வாறு எத்தனையோ சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. இதை யாராவது பொய்யென மறுக்கின்றீர்களா?
பெற்றோர்கள்
தம் பக்கம் இருப்பதால் பயமற்று மாணவர்களும் தம் தவறுகளை
அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர், பொலிஸ் முறைப்பாட்டிற்கும், வழக்கிற்கும்
தலை கொடுக்க விரும்பாத ஆசிரியர்கள் விலகியே செல்ல நேரிடுகிறது. இது எமது
இளம் மாணவர் சமுகத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடாகும். எங்களது பாடசாலை
வாழ்க்கைக் காலத்தில் எங்களுக்குக் கிடைத்த ஆசிரியர்கள் எங்களது பாடசாலை
நேர வாழ்க்கையை மட்டும் பாராது, பாடசாலை தவிர்ந்த நேரத்தையும் சேர்த்து
எங்கள் முழு வாழ்க்கையையும் கவனித்து அதனை ஒழுக்கம் நிறைந்ததாகக் கொண்டுவர
அரும்பாடு பட்டார்கள். இந்த நேரத்தில் எவ்வளவுதான் தண்டித்தாலும் எம்மையும்
சமூகம் அங்கீகரிக்கும் மனிதர்களாக மாற்றிய ஆசிரியர்களில் சிலரான
"கணிதப்பாட ஆசிரியர் திரு. சிராஜுதீன், பகுதித்தலைவர் திரு. சைபுதீன்,
சித்திரப்பாட ஆசிரியர் திரு. சிவானந்தராஜா ஆகியோருக்கும் இவர்களுக்கு
மிகுந்த உறுதுணையாகவும், பேருதவியாகவும் இருந்த அதிபர் திரு.
மீராமுகைதீன் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இவர்களுக்கு
எல்லாம் வல்ல அல்லாஹ் நித்திய சுகத்தையும், மறுமையில் ஈடேற்றத்தையும்
கொடுப்பானாக. மேலே நான் குறிப்பிட்ட இவ்வாசிரியர்கள் எங்கள் வெளி
வாழ்க்கையையும் கவனித்து தவறுகளுக்கு கடும் தண்டனை கொடுப்பவர்களாக
இருந்தார்கள். இவர்களின் தண்டனைகளுக்குப் பயந்தே நாங்கள் பல தவறுகளை
விட்டொழித்தோம். இவர்களுக்குப் பெற்றோர் மத்தியிலும் பெரும் மதிப்பும்
நம்பிக்கையும் இருந்தது, எந்தளவிற்கென்றால் மாணவர்கள் வீடுகளில் செய்யும்
தவறுகளையும் பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் முறையிட்டு தண்டித்துத் திருத்தக்
கூறுமளவிற்கு நம்பிக்கை பெற்றோர் மனதில் இருந்தது. ஆசிரியர் கண்டித்ததாய்ப்
பிள்ளை கூறியவுடன் எதுவுமே விசாரிக்காமல் போலிஸ் நிலையம் செல்லும் இன்றைய
பெற்றோர் சமூகத்திடம் இந்த நம்பிக்கையை எதிர்பார்க்கலாமா?, இல்லை
தண்டனைகளுக்குப் பயந்தாவது தவறு செய்யாதிருக்கும் மாணவர் சமூகத்தைத் தான்
எதிர்பார்க்கலாமா?. மேய்ப்பாளனிடம் கம்பில்லாவிட்டால் மந்தைகள் கூட அவனை மதியா.
சில ஆசிரியர்கள் "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய்
வளரும்" என்ற முதுமொழிக்கு ஏற்றாற்போல் மாணவர்களின் கல்வி, ஒழுக்க
வழர்ச்சிக்காய்ப் பாடுபடுபவர்களாகவும், சில ஆசிரியர்கள் கல்வி ஊட்டலை மட்டுமே
கருத்திற்க் கொண்டும், இன்னும் சிலர் சம்பளம் கிடைத்தால் மட்டும் போதும்
என்ற ஏனோ தானோப் போக்கிலும் இருப்பதைக் காணக்கூடியதாய் இருக்கிறது,
ஆசிரியர்கள் தமது வேலை ஒரு சேவை என்பதைக் கருத்திற்கொண்டு மாணவர்களின்
வாழ்வியல் ஒழுக்கத்தை நெறிப்படுத்துவதில் கவனத்தை அதிகரிக்கச் செய்தாலும்
பல தவறுகள் நடப்பதை முளையிலேயே தடுத்து விடலாம். """'ஒரு வைத்தியன் விடும் தவறு
ஒரு உயிரைக் கொன்றுவிடும், ஒரு ஆசிரியன் விடும் தவறு ஒரு தலைமுறையையே கொன்றுவிடும்.' என்றாலும் ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர்களின்
பக்கத்துணை மிக மிக முக்கியமானதாகும்.
பகுதி - 02 >>>>
பகுதி - 02 >>>>
No comments:
Post a Comment